திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகில் சுரேஷ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு, அருகில் இருந்த துணிக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது ஐந்து அடி நீளமுள்ள நாகப்பாம்பு இருசக்கர வாகனத்தின் இருக்கையின் அடியில் புகுந்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக சுரேஷிற்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் வருவதற்குள் ஆம்பூர் நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடிப்பவரான அசோக் என்பவர் பொதுமக்கள் உதவியுடன் பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.
பின்னர், அங்கிருந்து வனத்துறையினர் மூலம் பாம்பு ஆம்பூர் காப்புக்காட்டுப் பகுதிக்கு கொண்டுச் செல்லப்பட்டது. இந்நிகழ்வால் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.