ETV Bharat / briefs

சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்தவர் கைது!

திருப்பூர்: புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி ஒன்பது மாதங்களாக பாலியல் வன்புணர்வு செய்த நபரை போக்சோ சட்டத்தில் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்த நபர் கைது
Sexual harassment
author img

By

Published : Jul 27, 2020, 8:26 PM IST

திருப்பூர் மாவட்டம் புதுப்பாளையும் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (29). இவர் ஆறு வருடங்களாக தனது மனைவி, மூன்று குழந்தைகளுடன் அப்பகுதியில் வசித்துவருகிறார்.

இவர், அதே பகுதியில் வேலை செய்துவருகிறார். இந்நிலையில், அவரது வீட்டின் அருகிலுள்ள 14 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கடந்த ஒன்பது மாதங்களாக, அந்தச் சிறுமியை ஏமாற்றி பலமுறை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியவரவே, கடந்த இரண்டு நாள்கள் முன்பு அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்தி சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

இதனிடையே அவர்கள் தருமபுரியில் இருப்பதையறிந்த காவல் துறையினர் அங்கு சென்று சிறுமியை மீட்டனர். பின்னர் பிரபுவை கைது செய்து திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர், பிரபுவிடம் விசாரணை செய்த மகளிர் காவல் துறையினர் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.