ETV Bharat / briefs

அண்ணன் கழுத்தை அறுத்து கொலை செய்த தம்பி கைது! - Liquor Issues Murder

நாமக்கல்: மது வாங்கி தர மறுத்த அண்ணனை கழுத்தை அறுத்து கொலை செய்த தம்பியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

A Man Arrested For Murdered His Brother In Namakkal

author img

By

Published : Jun 19, 2020, 4:47 PM IST

நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி மாவிலை தெருவில் கண் பார்வையற்ற தாயுடன் வசித்து வந்தவர்கள் சோழராஜா (70), நாகேஷ் (67) சகோதரர்கள். இவர்கள் இருவரும் பழ வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் இருவரும் ஒன்றாக மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அப்போது, தனக்கு மது போதவில்லை எனவும் மேலும் மது வாங்கி தருமாறும் நாகேஷ் தனது அண்ணன் சோழராஜாவிடம் கேட்டதாக தெரிகிறது. சோழராஜா மது வாங்கித் தர மறுத்தநிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த நாகேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சோழராஜாவின் கழுத்து உள்பட மூன்று இடங்களில் அறுத்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் படுகாயமடைந்த சோழராஜாவை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவருக்கு கழுத்து பகுதியில் 13 தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, சோழராஜாவுக்கு தீவிர ரத்த போக்கு ஏற்பட்டநிலையில் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த மோகனூர் காவல் துறையினர் நாகேஷை கைது செய்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஊரங்கிலும் தொடரும் திருட்டு சம்பவங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.