ETV Bharat / briefs

மாமனாரை தாக்கிய மருமகன் கைது! - தஞ்சாவூரில் மாமனாரை தாக்கிய மருமகன் கைது

தஞ்சாவூர்: பூதலூர் அருகே நிலத் தகராறில் மாமனாரை தாக்கிய மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

A Man Arrested For Land Dispute In Thirukattupalli

author img

By

Published : Nov 23, 2020, 6:34 AM IST

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள இந்தலூர் தொண்டாம்பட்டி பூசாரி தெருவைச் சேர்ந்தவர் பெரியண்ணன் மகன் முத்தையன் (வயது 70).

அதே பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் சத்தியமூர்த்தி (வயது 51). முத்தையன் மகளை மாணிக்கம் திருமணம் முடித்துள்ளார். தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நிலத்தகராறு காரணமாக சத்தியமூர்த்தி கடந்த 20ஆம் தேதி முத்தையனை கல்லால் தாக்கியதில் அவருக்கு வலது கால் மற்றும் முகத்தில் படுகாயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் . இது குறித்து பூதலூர் காவல் நிலையத்தில் முத்தையன் புகார் அளித்தார்.

அதனடிப்படையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பாலு வழக்குப்பதிந்து சத்தியமூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.