ETV Bharat / briefs

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்த நபர் கைது!

author img

By

Published : Jun 19, 2020, 3:44 AM IST

கோவை: இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏழு லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

A Man Arrested For Love Cheating
A Man Arrested For Love Cheating

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் தனியார் நிறுவனத்தின் உயர் கல்வி ஆலோசனை மையத்தில் பணிபுரிந்துவருகிறார். அதே நிறுவனத்தில் மேலாளராக திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது நபி என்பவர் பணிபுரிந்துவருகிறார்.

இருவரும் உயர் கல்வி குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க பல்வேறு கல்லூரிகளுக்குச் சென்றுவருவது வழக்கம். முதலில் இவர்கள் இருவரும் நண்பர்களாகப் பழகியுள்ளனர். நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. காதலிக்கும்போது முகமது நபி அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகப் பலமுறை கூறியிருக்கிறார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு முகமது நபி தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவச் செலவிற்காக அந்தப் பெண்ணிடம் ஏழு லட்சம் ரூபாய் வாங்கிச் சென்றுள்ளார். அதன்பின், முகமது நபி அப்பெண்ணுடனான தொடர்பைத் துண்டித்துள்ளார். சில நாள்களுக்கு முன் அந்தப் பெண் முகமது நபியைத் தொடர்புகொண்டு, தன்னைத் திருணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

அதற்கு அவர் திருமணமும் செய்து கொள்ள முடியாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்பின் நபி அப்பெண்ணின் வீட்டுக்கே சென்று தகராறு செய்துள்ளார். அப்போது, அவரது குடும்பத்தினர் திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளனர். அதற்கு பணம் தர முடியாது என்று மறுத்துப் பேசியிள்ளார்.

இதுகுறித்து அப்பெண் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து முகமது நபியைக் கைதுசெய்து சிறையிலடைத்தனர்.

இதையும் படிங்க: காசி வீட்டில் சோதனை... தொடர்பிலிருந்தவர்கள் குறித்து சிக்கிய முக்கிய ஆவணங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.