சென்னை செங்குன்றம் அடுத்த தீர்த்தங்கரையம்பட்டு கோட்டூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரது மனைவி தீபா. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளான நிலையில் குழந்தை இல்லை.
இந்நிலையில் நேற்று மாலை திடீரென தீபா காணாமல் போனதால் உறவினர்கள் வீடுகளில் அவரை தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் புழல் ஏரியில் பெண் ஒருவரது சடலம் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் ஏரியில் குதித்து தண்ணீரில் மிதந்த பெண்ணின் சடலத்தை மீட்டனர். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் நேற்றிரவு காணாமல் போன தீபாவின் சடலம் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து உடற்கூறு ஆய்விற்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் விரக்தியடைந்து தீபா தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.