கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை வனச்சரகத்திற்குட்பட்ட வாட்டர்பால் தேயிலைத் தோட்டப் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
களதுணை இயக்குநர் ஆரோக்கியாராஜ் சேவியர் உத்தரவின்படி, உதவி வன பாதுகாவலர் செல்வம், வால்பாறை வனச்சரகர் ஜெய்சந்திரன், மணிகண்டன் வனவர் முனியாண்டி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானையின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் வனத்துறையின் சிறப்பு மருத்துவர் சுகுமார் தலைமையிலான குழுவினர் யானையின் உடலில் உடற்கூறாய்வு மேற்கொண்டனர். பின்னர், யானையின் முக்கிய பாகங்கள் வனத்துறை ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. உயிரிழந்தது ஆண் யானை என்றும் வயது 30லிருந்து 35க்குள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. காட்டு யானை உயிரிழப்பு குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.