தஞ்சாவூர் மாவட்டத்தில் திருட்டுத்தனமாக மணல் கடத்திய 12 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ஒரு லாரி , இரண்டு டாடா வண்டி மற்றும் ஒன்பது மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தஞ்சை மாவட்ட கண்காணிப்பாளர் மகேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சில நபர்கள் ஆற்றுப்படுகையை ஒட்டியுள்ள பட்டா நிலத்தில் மணல் அள்ள அனுமதி அளிக்கும், நிலத்தின் உரிமையாளர்கள் மற்றும் மணல் அள்ளுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் சவ்வுடு மண், கிராவல், குளத்து வண்டல் மண் அள்ளுவதற்கு வருவாய் துறையினரிடம் உரிய அனுமதி பெறவேண்டும்.
இதனை மீறு ஆற்றில் மணல் அள்ளினால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு சம்மந்தப்பட்டவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: வாத்தியம் இசைத்தபடி நிவாரண மனு அளிக்கவந்த இசைக்குழுவினர்!