ETV Bharat / briefs

ஊஞ்சலில் விளையாடிய 9 வயது சிறுமி உயிரிழப்பு! - கட்டிலிலிருந்து விழுந்த சிறுமி உயிரிழப்பு

கோயம்புத்தூர்: சிங்காநல்லூர் அருகே 9 வயது சிறுமி துணியை வைத்து ஊஞ்சலில் விளையாடும்போது எதிர்பாராதவிதமாக, துணி கழுத்தில் கிக்கி உயிரிழந்தார்.

9 year old girl dies after playing swing!
கட்டிலில் இருந்து கீழே விழுந்த சிறுமி உயிரிழப்பு
author img

By

Published : Jul 9, 2020, 2:15 PM IST

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் அடுத்த நீலிகோணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர், அருள் ஞான ஜோஸ். இவர் அப்பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இவரது 9 வயது மகள் ஜெர்லின் நேகா நேற்று (ஜூலை 8) மாலை வீட்டின் முன்பு உள்ள ஊஞ்சலில் துணியைக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கும்போது, எதிர்பாராத விதமாக அந்த துணி கழுத்தை இறுக்கியதால் மயக்கமடைந்தார்.

இதனைக்கண்ட அவரது பெற்றோர் பதறியடித்துக்கொண்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஜெர்லின் நேகா மூச்சுத் திணறி உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

இவரது தாயார் நிஷா, கோவை அரசு மருத்துவமனையில் செவிலியாகப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் கோவை - ஒண்டிபுதூர், சாமியார்மேடை பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரின் ஒன்பது வயது மகள் பவதாரணி, கடந்த 6ஆம் தேதி வீட்டில் படித்துக்கொண்டிருக்கும்போது கட்டிலில் இருந்து கீழே விழுந்த பென்சிலை எடுக்கும்போது, கட்டிலில் இருந்து தவறி விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னர், அவர் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று(ஜூலை 8) அவருக்கு அறுவை சிகிச்சை செய்தபோது சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த இரு சம்பவங்களும் அருகருகே நடந்ததால், அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.