பிகார் மாநிலம் தானபூர் மாவட்டத்தில் அகில்பூரிலிருந்து தனபூருக்குச் செல்வதற்காக ஜீப்பில் பயணிகள் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த ஜீப், பீபா பாலத்தின் தடுப்பின் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில், ஜீப்பிலிருந்த பயணிகள் அனைவரும் கங்கை ஆற்றில் மூழ்கினர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், பேரிடம் மீட்புக் குழுவினர் தண்ணீரில் மூழ்கிய நபர்களை மீட்டு வருகின்றனர்.
மீட்கப்பட்ட பயணிகளில் ஒருவரான அரவிந்த் சிங், ஈடிவி பாரத் செய்தியாளரிடம் கூறுகையில், "சம்பவம் நடந்தபோது மூன்று குழந்தைகள் ஜீப்பில் இருந்தனர். நானும் மற்ற பயணிகளுடன் சேர்ந்து வாகனத்தின் மேல் அமர்ந்திருந்தேன்.
அப்போது, எதிர்பாராத விதமாக வாகனம் பாலத்தின் ஓரமாக போடப்பட்டுள்ள தடுப்புகளை உடைத்துக்கொண்டு தண்ணீரில் மூழ்கியது. தற்போது, மீட்புக் குழுவினர் பயணிகளை மீட்டு வருகின்றனர்” எனத் தெரிவித்தார். இந்த விபத்தில் ஒன்பது பயணிகள் உயிரிழந்துள்ள நிலையில், 12 பேரை மிட்புக் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.