ஓமன் நாட்டின் மஸ்கட் நகரிலிருந்து மீட்பு சிறப்பு தனி விமானம் 183 இந்தியா்களுடன் நேற்று மாலை சென்னை வந்தது. அதில் வந்தவர்களில் 169 பேர் ஆண்கள்,14 பேர்பெண்கள். இவர்கள் அனைவருமே கத்தார் நாட்டில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள்.
அந்த நிறுவனமே அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று, தனி விமானத்தில் இந்தியா அழைத்துவந்தது.எனவே இவா்களுக்கு சென்னை விமானநிலையத்தில் இலவச மருத்துவ பரிசோதணை,அரசின் இலவச தங்குமிடங்கள் கிடையாது. இதையடுத்து அனைவரும் கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான விடுதிகளுக்கு 14 நாள்கள் தனிமைக்கு அனுப்பப்பட்டனர்.
கத்தார் நாட்டின் தோகா நகரிலிருந்து மீட்பு சிறப்பு விமானம் 177 இந்தியா்களுடன் நேற்று இரவு சென்னை வந்தது. அதில் ஆண்கள் 104, பெண்கள் 63 சிறுவா்கள் 8,குழந்தைள் என அனைவருக்கும் மருத்துவ பரிசோதணைகள் முடிந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் 114 பேர் அரசின் இலவச தங்குமிடங்களுக்கும்,63 பேர் கட்டணம் செலுத்தும் விடுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர்.
சார்ஜாவிலிருந்து சிறப்பு மீட்பு விமானம் மூலம் நேற்று இரவு 181 இந்தியர்கள் சென்னை வந்ததனர். அதில் 126 ஆண்கள், 50 பெண்கள், 5 சிறுவர்கள். இவர்கள் மருத்துவ பரிசோதனை முடிந்து 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அவா்களில் 142 பேர் அரசின் இலவச தங்குமிடங்களுக்கும், 39 பேர் கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான ஹோட்டலுக்கும் அனுப்பப்பட்டனர்.
குவைத்திலிருந்து சிறப்பு மீட்பு விமானம் நேற்று நள்ளிரவு 173 இந்தியர்களுடன் சென்னை வந்தது. அதில் 153 ஆண்கள், 14 பெண்கள், 6 சிறுவர்கள்.அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை முடிந்து 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் 153 பேர் அரசின் இலவச தங்குமிடங்களுக்கும்,20 போ் கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான விடுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர்.
சாா்ஜாவிலிருந்து இன்று அதிகாலை 159 இந்தியா்களுடன் சென்னை வந்த சிறப்பு விமானத்தில் 115ஆண்கள், 32 பெண்கள் , 12 சிறுவா்கள் வந்தனர். அனைவரும் மருத்துவ பரிசோதணை முடிந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவா்களில் 101 போ் அரசின் இலவச தங்குமிடங்களுக்கும், 55 போ் கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான விடுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர். அதில், 3 போ் புதுவை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் புதுச்சேரிக்கு அனுப்பப்பட்டனர்.