தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது கைலாசபட்டி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 27 வயது நபர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமில் பணிபுரிந்துவந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊர் திரும்பியவருக்கு மதுரை விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
கைலாசபட்டியில் அவருடன் தொடர்பில் இருந்த 42 நபர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன் முடிவில் இன்று (ஜூன் 18) எட்டு நபர்களுக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.