ETV Bharat / briefs

நெல்லையில் 7 வயது சிறுமி கொலை: உடலை வாங்க விசிக மறுப்பு!

author img

By

Published : Jul 16, 2020, 10:42 PM IST

தூத்துக்குடி: 7 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் வரும் வரை உடலை வாங்க மாட்டோம் என விசிகவினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

7 year old girl murder case VCK refuses to buy body In Thoothukudi

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள கல்விளை இந்திரா நகரைச் சேர்ந்த சேகர்- உச்சிமாகாளி தம்பதியின் 7 வயது மகள் நேற்று ஊருக்கு வெளியே சடலமாக மீட்கப்பட்டார்.

அடையாளம் தெரியாத நபர்கள் அவரது உடலை தண்ணீர் நிரப்பும் டிரம்மில் வைத்து பாலத்திற்கு அடியில் வீசிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சாத்தான்குளம் காவல் துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில், அதே பகுதியைச் சேர்ந்த முத்தீஸ்வரர், நந்தீஸ்வரன் ஆகிய இருவரை கைது செய்தனர்.

இதற்கிடையில், சிறுமியின் உடல் உடற்கூறாய்விற்காக திருநெல்வேலி அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டது.

ஏற்கனவே அங்கு பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த உடல்கள் உடற்கூறாய்விற்கு வைக்கப்பட்டிருந்ததால் தாமதமாக அதாவது இன்று மாலை 5 மணியளவில் சிறுமியுடன் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

உயிரிழந்த சிறுமி ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் விசிகவினர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

பின்னர் அவர்களும் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை உடலை வாங்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விசிக மாவட்ட செயலாளர் முரசு தமிழகம் கூறுகையில், " 7 வயது சிறுமி போதை ஆசாமிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் இதுவரை இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிக்கவில்லை.

மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று இரங்கல் தெரிவிக்க வில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் இங்கு நேரில் வர வேண்டும்.

அது வரை உடலை வாங்க மாட்டோம் என்று அறவழிப் போராட்டம் நடத்தி வருகிறோம். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி நிவாரணம் வழங்க வேண்டும்.

அதேபோல், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து உறுதி அளிக்கும் வரை உடலை வாங்க மாட்டோம்" என்றார்.

இதையும் படிங்க: கிணற்றில் தற்கொலை முயற்சி - தாய் உயிருடன் மீட்பு - 2 குழந்தைகள் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.