கரோனா தொற்றின் மிகத் தீவிரம் காரணமாக மதுரை மாவட்டம் முழுவதுமே பீதியில் இருந்த நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று (ஜூலை11) ஒரே நாளில் 553 பேர் கரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மதுரையில் மட்டும் இன்றைய தேதி வரை ஐந்து ஆயிரத்து 757 பேர் கரோனா தொற்றின் காரணமாக, மதுரை அரசு இராஜாஜி பல்நோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
தற்போது மட்டும் மூன்று ஆயிரத்து 843 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மொத்தம் ஆயிரத்து 803 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதுவரை சிகிச்சைப் பலனின்றி 111 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் ஒரே நாளில் 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 277 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாள்களாக கரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்படுவார் எண்ணிக்கை சராசரியாக நாள் ஒன்றுக்கு 200 அல்லது 300 ஆக இருந்த நிலையில், குணமடைந்து வீட்டுக்கு செல்வோர் எண்ணிக்கை வெறும் நூறு பேருக்குள் தான் இருந்தது. இந்நிலையில், ஒரே நாளில் 553 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளது மதுரை மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் ஒரே நாளில் 70 பேருக்கு கரோனா உறுதி!