நடிகர் விஜய் வரும் 21ஆம் தேதி தனது 46ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி சமீபத்தில் அவரின் பிறந்தநாள் கமான் டிபி வெளியானது.
இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, எடிட்டர் மணிக்குமரன் சங்கரா கருத்தாக்கத்தில் உருவாகியுள்ள "என் உயிர்த் தளபதி" வாழ்த்துப்பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது.
ஆதித்யா ஸ்ரீராம் இசையமைத்துள்ள இப்பாடலை அபிஷேக் புகழ், நித்யா பாலாஜி பாடியுள்ளனர்.
மேலும் சந்தோஷ் சிவன், பார்த்திபன் பாடலாசிரியர் விவேக், நடிகர் ஸ்ரீமன் நடிகைகள் சாக்ஷி அகர்வால், யாஷிகா ஆனந்த் அப்துல்லா உள்ளிட்ட 46 திரை பிரபலங்கள் பாடலை வெளியிடுகின்றனர்.