கோவையில் நேற்று 446 பேர் கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கோவையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 19ஆயிரத்து 948 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த ஆயிரத்து 87 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 584 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.