மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் வளாகத்தில் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அரசு மருத்துவமனை உள்ளிட்ட மதுரையின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையங்களில் இதுவரை 8 ஆயிரத்து 705 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். அதில், 5 ஆயிரத்து 515 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 3 ஆயிரத்து 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சிகிச்சை பலனின்றி 174 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், நேற்று (ஜூலை 22) மட்டும் பூரண குணமடைந்த 445 பேர் வீட்டிற்கு சென்றனர். அதே போல், 197 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே, 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: விருதுநகரில் இன்று ஒரே நாளில் 363 பேருக்கு கரோனா உறுதி!