நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த பாலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச்சென்ற கோமல் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியானது.
இதனால், காவல் நிலையத்தில் பணியிலிருந்த ஐந்து காவல் துறையினர், ஆறு ஊர்க்காவல் படையினர் மயிலாடுதுறையிலுள்ள திருமண மண்டபத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதில் நான்கு ஊர்க்காவல் படையினருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் நான்கு பேரையும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
கோமல் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் பீகார் மாநிலத்திலிருந்து திரும்பியவர் ஆவார்.
இதையும் படிங்க : சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்த முதியவர் போக்சோவில் கைது!