கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டத்திற்கு உள்பட்ட பஞ்சமாதேவி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரிய சாமி (45). இவர் அப்பகுதியில் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வருகிறார்.
இவர் மே மாதம் 21ஆம் தேதி கரூரில் உள்ள நரிகட்டியூர் பகுதியில் சாலையோரம் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார்.
அப்போது அலெக்சாண்டர், பிரபாகரன், துரைமுருகன் ஆகிய மூவரும் விபத்தில் சிக்கிய பெரிய சாமிக்கு உதவுவது போல் நடித்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் அவரிடமிருந்து மூன்று பவுன் தங்க செயினை திருடிச் சென்றனர். இதுதொடர்பாக பசுபதி பாளையம் காவல் நிலையத்தில் பெரியசாமி புகாரளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவலர்கள் அலெக்சாண்டர், பிரபாகரன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பித்து சென்ற துரைமுருகனை தேடி வருகின்றனர்.