கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள மட்டன்னூர் கலால் அலுவலகத்தில் 28 வயதான இளைஞர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, அவர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருந்தபோதும், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அவரது இறப்பை தொடர்ந்து மட்டன்னூர் கலால் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. மேலும், அவரது குடும்பத்தினரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, 18 கலால் அலுவலர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.