நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில் தங்கி வேலை பார்த்துவந்த வெளிமாநிலத்தவர்கள் கரோனா தொற்று ஊரடங்கால் கடந்த மாதம்வரை ஆயிரக்கணக்கான நபர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிசென்றனர்.
இந்நிலையில், மயிலாடுதுறையிலிருந்து குஜராத்திற்கு சென்றிருந்த 25 பேர், மீண்டும் மயிலாடுதுறைக்கு வருவதற்காக குஜராத் அரசிடம் அனுமதி பெற்று, தனி பேருந்து மூலம் இன்று (ஜூலை 19) விடியற்காலை மயிலாடுதுறை திருவாலங்காடு சோதனைச்சாவடிக்கு வந்தனர். அங்கே அவர்களை சோதனை செய்த காவல்துறையினர், அங்கிருந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களுக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தற்போது மன்னம்பந்தல் தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.