கரூர் மாவட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் இரண்டு ஆயிரம் கிலோ பொடிகளை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் சம்மந்தப்பட்ட பொறுப்பாளரிடம் வழங்கி தொடங்கி வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் கூறுகையில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கரூர் மாவட்டம் முழுவதும் பணிகள் தீவிரம் அடைந்து வருகிறது. இருப்பினும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுரக் குடிநீர் தயாரிக்க 2 ஆயிரம் கிலோ கபசுர பொடி வாங்கப்பட்டு நகராட்சி பேரூராட்சி பஞ்சாயத்து அலுவலகங்கள் மற்றும் கரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள இடங்களுக்கு சென்று வீடு வீடாக வழங்கப்பட உள்ளது.
மேலும் கரூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 47 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 272 நபர்கள் நோய்த் தொற்றில் இருந்து விடுபட்டு வீடு திரும்பி இருக்கின்றனர் என மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எலக்ட்ரானிக் கடையில் வேலை செய்த 10 பேருக்கு கரோனா!