சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் இரண்டு நபர்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இரண்டு நபர்களும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
மேலும், ஆட்சியர் அலுவலகம் முழுவதிலும், குறிப்பாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைந்துள்ள மூன்றாவது தளம் முழுவதும் தற்போது மாநகராட்சி பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். மேலும், அந்த அலுவலகத்தில் பணிபுரியக்கூடிய 600க்கும் மேற்பட்ட ஊழியர்களை அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள தற்காலிகமாக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கரோனா பாதித்த இரண்டு ஊழியர்களின் வீடுகளிலும் தற்போது மருத்துவக் குழுவினர் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.