திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 443ஆக இருந்தது. மேலும் இன்று புதிதாக 191 பேருக்கு தொற்று உறுதியானதால், மாவட்டத்தில் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 634ஆக உயர்ந்துள்ளது.
நேற்றுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்து 2 ஆயிரத்து 466 பேர் வீடு திரும்பியுள்ளானர். இதுவரை தொற்றால் 35 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
சென்னையிலிருந்து வந்த 11 பேர், பிகார், காஞ்சிபுரம், பாண்டிச்சேரி, விழுப்புரம் ஆகிய பகுதிகளிலிருந்து வந்த தலா ஒருவர், நோயாளியுடன் தொடர்பில் இருந்த 83 பேர், இரண்டாம் நிலை தொற்றால் பாதிக்கப்பட்ட 21 பேர், புறநோயாளிகள் பிரிவிலிருந்து 51 பேர், முன்களப் பணியாளர் ஒருவர், மற்ற மாவட்டங்களிலிருந்து அனுப்பப்பட்ட 20 பேர் உள்ளிட்ட 191 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இயங்கிவரும் கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.