ETV Bharat / briefs

13 சிறுவர்கள் உட்பட ஒரே நாளில் 172 பேருக்குக் கரோனா நோய்த்தொற்று உறுதி

திருவண்ணாமலை: 15 வயதுக்குட்பட்ட 13 சிறுவர்கள் உட்பட, புதிய உச்சமாக ஒரே நாளில் மட்டும் 172 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

15 வயதுக்குட்பட்ட 13 சிறுவர்கள் உட்பட, புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் மட்டும் 172 பேருக்கு கரோனா நோய் தொற்று

author img

By

Published : Jul 5, 2020, 8:43 AM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில்,ஜூலை 3 வரை கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 182ஆக இருந்தது. மேலும் நேற்று (ஜூலை 4) புதிதாக 172 பேருக்கு தொற்று உறுதியானது. மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 354 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையிலிருந்து வந்த 6 பேர்; காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, சிதம்பரம், கோயம்புத்தூர் பகுதிகளிலிருந்து வந்த தலா ஒருவர், பெங்களூருலிருந்து வந்த 2 பேர், நோயாளியுடன் தொடர்பில் இருந்த 82 பேர், இரண்டாம் நிலை நோய்த்தொற்று பெற்ற 41 பேர், புறநோயாளிகள் பிரிவில் இருந்து 26 பேர், முன் களப்பணியாளர்கள் 4 பேர், மற்ற மாவட்டங்களிலிருந்து அனுப்பப்பட்ட 6 பேர் உட்பட நேற்று(ஜூலை 4) 172 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நாவல்பாக்கம், வந்தவாசி, காட்டாம்பூண்டி, தண்டராம்பட்டு, பொன்னூர், கலசப்பாக்கம், கீழ்பென்னாத்தூர், ஆக்கூர், ஆரணி, போளூர், பெருங்காட்டூர், எஸ்.வி. நகரம், சேத்பட், திருவண்ணாமலை நகராட்சி உள்ளிட்ட சுகாதார வட்டத்தைச் சேர்ந்த இந்த 172 பேரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா வார்டில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரை, 15 பேர் மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மே மாதம் முதல் தேதியிலிருந்து சென்னை மற்றும் வெளியூரிலிருந்து வந்தவர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகி வந்தனர்.

நாளடைவில் நோயாளியுடன் தொடர்பில் இருந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

தற்போது இரண்டாம் கட்ட தொற்று மற்றும் புறநோயாளிகள் பிரிவில் நோய்த்தொற்று உறுதி செய்யப்படும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 67 நாட்களில் மட்டும் 155 மடங்கு நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.