திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிழக்கு ஆரணி, நாவல்பாக்கம், ஜமுனாமரத்தூர், கலசப்பாக்கம், ஆக்கூர், வந்தவாசி, பெருங்கட்டூர், போளூர், காட்டாம்பூண்டி, தச்சூர், செங்கம், சேத்பட், துரிஞ்சாபுரம், திருவண்ணாமலை நகராட்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 142 பேருக்கு இன்று (ஆகஸ்ட் 2) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதில் நோயாளியுடன் தொடர்பில் இருந்த 36 பேர், இரண்டாம் நிலை நோய்த்தொற்று பெற்ற 25 பேர், புறநோயாளிகள் பிரிவில் இருந்த 45 பேர், முன் களப்பணியாளர் ஒருவர் உள்ளிட்ட 142 பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா வார்டில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதனால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 446ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 68ஆக உள்ளது. சிகிச்சைப் பலனின்றி 63 பேர் உயிரிழந்தனர். மேலும், கடந்த சில நாள்களாக தொடர்ந்து புறநோயாளிகள் பிரிவில் கரோனா தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது.
இதனிடையே, நோயாளிகளிடம் தொடர்பில் இருந்தவர்களிடம் தொற்று பாதிக்கப்பட்டு, அது மற்றவர்களுக்கு இரண்டாம் கட்ட பாதிப்பாக தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.