தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 16) மேலும் நான்கு ஆயிரத்து 549 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 369ஆக அதிகரித்துள்ளது.
இன்று கரோனாவுக்கு 69 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஐந்தாயிரத்து 106 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் மூன்று ஆயிரத்து 392 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஆயிரத்து 1,157 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
ஆக, சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 128ஆக உள்ளது.
இதையும் படிங்க: சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர்களுக்கு ஜூலை 30 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!