ETV Bharat / state

உடனுக்குடன்: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிகழ்வுகள்! - 2020 Tamil Nadu Assembly first Session

tn assembly live
tn assembly live
author img

By

Published : Jan 8, 2020, 10:18 AM IST

Updated : Jan 8, 2020, 3:31 PM IST

15:26 January 08

வளர்பிறை அதிமுக - முதலமைச்சர் பழனிசாமி

ஸ்டாலின் பேச்சுக்கு முதலமைச்சர் தந்த பதில்:

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளை இடைத்தேர்தல் வெற்றி மூலம் திமுகவிடம் இருந்து அதிமுக பெற்றுள்ளது. இதன் மூலம் எது வளர்பிறை, தேய்பிறை என்று மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர் திமுகவின் பொய்யான வாக்குறுதிகளால் பஞ்சாயத்து தேர்தலில்  அதிமுக  குறைவான வாக்குகளை பெற்றுள்ளது. எங்களை வளர்பிறை என்று மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர். அதிமுக நாடாளுமன்ற தேர்தலில் வாங்கிய வாக்குகள் மற்றும் தற்போது உள்ளாட்சி தேர்தலில் வாங்கிய வாக்குகளை பார்த்தால் நாங்கள் வளர்பிறை என்று தெரியும்.

15:25 January 08

ஸ்டாலின் பெருமிதம்

"உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. வெற்றியை கொடுத்த மக்களுக்கு நன்றி. வெற்றிக்கு பிறகும் திமுக வெற்றியை வளர்பிறை, தேய்பிறை என்று விமர்சித்து வருகின்றனர். 2014இல் திமுக சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள்  எவரும் இல்லை, 2019இல் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்" என ஸ்டாலின் பெருமையுடன் பேசினார்.
 
15:11 January 08

ஆளுநர் உரை மீது அதிரடி கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி:

தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி ஆளுநர் உரையில் இல்லை. எனவே இந்த அறிக்கையை பயத்தின் அறிக்கை எனதான் கூற வேண்டும்.

ஆளுநர் உரை பக்கம் இரண்டில் - தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கூற்றை கூறியுள்ளார்.  ஆனால் பக்கம் நான்கில் சட்ட ஒழுங்கு, பொருளாதாரம் போன்றவற்றில் தமிழ்நாடு முதலிடம் என்று உள்ளது. இதில் எது உண்மை?

நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கையை எடுக்காமல்  சட்ட ஒழுங்கில் முதலிடம் என்று எவ்வாறு கூற முடியும். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை போன்றவற்றை மறைத்து எவ்வாறு சட்ட ஒழுங்கில் தமிழ்நாடு முதலிடம் என்று கூற முடியும் என பேசியுள்ளார். 

முதலமைச்சர் பழனிசாமி பதில்:

எல்லா துறைகளையும் கணக்கெடுத்துதான் தமிழ்நாடு முதல் இடம் என்று கூறப்படுகிறது.
 
14:48 January 08

சட்டசபையில் புதிதாக மூன்று சட்ட மசோதா தாக்கல்

1. முறைகேட்டில் ஈடுபடும் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவரை பதவி நீக்கம்  செய்யும் புதிய சட்டத் திருத்த மசோதா 

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தாக்கல் செய்த இந்த சட்டத் திருத்த மசோதாவில், 1983ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தில், பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் கையாடல், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட முறைகேட்டில் ஈடுபடும் போது அவர்களை தற்காலிகமாக பதவி நீக்கம் செய்ய எந்த வழிவகைகளும் இல்லை. எனவே, கூட்டுறவு சங்கத்தில் பணிபுரியும் அலுவலர் மற்றும் பணியாளரை தற்காலிகமாக பதவி நீக்கம் செய்வது போன்று, பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவரை பதவி நீக்கம் செய்யும் வகையில் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் நிதி பயன்பாட்டின் அதிகாரத்தை துணைவேந்தரிடம் இருந்து அரசுக்கு வழங்கும் வகையிலான புதிய சட்டத் திருத்த மசோதா

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்  தாக்கல் செய்த இந்த சட்டத் திருத்த மசோதாவில், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் நிதி பயன்பாட்டை கண்காணிப்பதற்காக, ஆய்வு மற்றும் விசாரணை செய்யும் அதிகாரத்தை வேந்தரிடம் இருந்து அரசுக்கு வழங்கும் வகையிலும் மீன்வள பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை தேர்வு செய்யும் வல்லுநர் குழுவில் அரசு பிரதிநிதி ஒருவரை சேர்க்கவும்  வழிவகை செய்யப்பட்டுள்ளது.

3. வேளாண் விளைபொருள் சந்தைப் படுத்துதல் பற்றிய புதிய சட்டத் திருத்த மசோதா

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு  தாக்கல் செய்த இந்த சட்டத் திருத்த மசோதாவில்,  தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தைப் படுத்துதல் மூன்றாம் திருத்த அவசர சட்டமாக  பிறப்பிக்கப்பட்டது.
 
13:59 January 08

பேரவையில் சிரிப்பலை

திமுக உறுப்பினர் கிருஷ்ணசாமி: டெங்கு காய்ச்சல் இறப்பு குறித்து கேள்வி

அமைச்சர் விஜயபாஸ்கர்:  9 மருத்துவக் கல்லூரி உள்பட சுகாதாரத் துறையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிக்கிறது. இதையெல்லாம் பாராட்ட மனமில்லாத எதிர்க்கட்சி உறுப்பினர், குற்றம்குறைகளை தேடி பேசுகிறார்.

திமுக பொருளாளர் துரைமுருகன்: எதிர்க்கட்சிகளிடம் இருந்து அரசு பாராட்டுக்களை எதிர்பார்க்கக் கூடாது.

அமைச்சர் விஜயபாஸ்கர்: மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும்  மணம் உண்டு  

திமுக பொருளாளர் துரைமுருகன்: மலராக இருந்தால் பரவாயில்லை, காகித பூவாக இருந்தால் என்ன செய்வது.

13:43 January 08

'அதிமுக அரசு யாருக்கும் அஞ்ச போவதில்லை' - முதலமைச்சர் பேச்சு

"அதிமுக அரசு யாருக்கும் அஞ்ச போவதில்லை. அமைச்சர்கள் எப்படி பேச வேண்டும் என யாரும் உத்தரவிட முடியாது" -  முதலமைச்சர் பழனிசாமி

13:15 January 08

நீட் விவகாரம்: திமுக Vs அதிமுக

நீட் தேர்வு குறித்து சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள்:

  1. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த ஆறாம் தேதி கடைசி நாள். இரண்டு நாட்களுக்கு முன் நீட் தேர்வை ரத்து செய்ய தமிழ்நாடு உச்சநீதிமன்றத்தில்  தொடரப்பட்டு வழக்கு எந்த நிலையில் உள்ளது?
  2. நீட் விலக்கு குறித்து மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அனுப்பிய மசோதாக்களின் நிலை என்ன?

கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டில் நீட் கொண்டுவரப்படவில்லை என எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் பேரவையில் பேசினார். மேலும்,   நீட் விலக்கு பெற அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.  நீங்கள் தும்பிக்கையை விட்டு வாலை பிடித்து கொண்டுள்ளீர்கள் என அரசை குற்றம்சாட்டினார். 

 நீட் விவகாரத்தில் நாங்கள் துரோகம் இழைத்தவர்கள் என்றால் அந்த துரோகத்திற்கு விதை போட்டது திமுக, காங்கிரஸ் தான்  என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்தார். 

12:57 January 08

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு துரைமுருகன் பதிலடி!

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: எதிர்கட்சிகளுக்கு அரசை பாராட்ட மனம் வருவதில்லை. 

எதிர்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன்: ஆளும் அரசின் குறைகளை சூட்டிக்காட்டவே வந்துள்ளோம் தவிர பாராட்ட அல்ல! 

12:53 January 08

சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரை மீதான  விவாதத்தில், கூட்டுறவு சங்கத்தில் முறைகேட்டில் ஈடுபடும் தலைவர், துணை தலைவரை பதவி நீக்கம் செய்யும் சட்ட மசோதாவை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தாக்கல் செய்தார்.

முறைகேட்டில் ஈடுபடும் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்,  துணை தலைவர் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய எந்த சட்டமும் இல்லை. எனவே கூட்டுறவு சங்க தலைவர், துணை தலைவரை தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யம் வகையில் 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான சட்ட மசோதாவை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

12:53 January 08

ஒரே பந்தில் ஒன்பது ரன்கள் எடுத்தவர் முதலமைச்சர் பழனிசாமி - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புகழாரம்!

தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் ஒன்பது மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி பெற்றது குறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

12:33 January 08

ஜெயலலிதா மிகவும் துணிச்சலானவர் - துரைமுருகன்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளவரை  தமிழ்நாட்டில் நீட் தேர்வு வரவில்லை. அவர் மறைவிற்கு பிறகே நீட் தேர்வு தமிழ்நாட்டில்  வந்துள்ளது என எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்தார்.

11:46 January 08

எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் கேள்வி:  திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நெல் விளைச்சல் அதிகளவில் இருந்தாலும் கூட அங்கு அரசு நெல் கொள்முதல் செய்யாத காரணத்தினால் தனிப்பட்ட விவசாயிகளுக்கு குறைந்த விலையில் நெல்லை விற்கும் சூழல் இருக்கிறது. அதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா?  

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பதில்: நெல் வரத்து அதிகமாக இருக்கக் கூடிய டெல்டா அல்லாத மாவட்டங்களில் மட்டும் 38 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நெல் விளைச்சல் எங்கெங்கு அதிகளவில் இருக்கிறதோ அந்தந்த இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்.

11:34 January 08

தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் - அதிமுக உறுப்பினர் மனோன்மணி புகழாரம்

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணி கேள்வி: மொடக்குறிச்சி தொகுதியில் புதிய நீதிமன்றம்  அமைக்க அரசு முன்வருமா ? 

சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் பதில்: ஒரு மாவட்டத்தில் இருக்கும் நீதிமன்றத்தில் பெறப்படும் வழக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் புதிய நீதிமன்ற அமைக்க, வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை வைத்தால்  அதனை உயர்நீதிமன்ற குழு அரசுக்கு பரிந்துரை செய்தால் மட்டுமே புதிய நீதிமன்றம் உருவாக்கப்படும். மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை. நீதிமன்ற உட்கட்டமைப்புகளை மேம்படுத்த இதுவரை 287 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

11:19 January 08

மீண் சாப்பிட்டால் கண் நன்றாக தெரியும் - அமைச்சர் ஜெயகுமார்!

காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ முருகுமாறன் கேள்வி: வீராணம் ஏரியில் நவீன மீன்வகைகளை  வளர்க்க  அரசு நடவடிக்கை எடுக்குமா?

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பதில்: கட்லா, ரோகு, ஜெயந்தி ரோகு, கெண்டை உள்ளிட்ட மீன்குஞ்சுகள் இருப்பு வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. வீராணம் ஏரியில் நவீன ரக மீன்வகைகளை வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும்.  உலகத்தில் மீனை விட சிறந்த உணவு எதுவும் இல்லை. மீன் சாப்பிட்டால் மாரடைப்பு, கண் சார்ந்த பிரச்னைகள், புற்றுநோய் உள்ளிட்ட எந்த நோய்களும்  வராது. மீன் சாப்பிட்டால் கண் நன்றாக தெரியும்  நான் கூட 55 வயதில் தான் கண்ணாடி போட்டேன். 

11:11 January 08

எம்எல்ஏ கருணாஸ் கேள்வி: திருவாடனை, புத்தூர் கிராமத்தில்  சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கலையரங்கம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கப்படுமா?

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில்: திருவாடானை  புத்தூர் கிராமத்தில்  அரசு நிதியிலிருந்து  புதிய கலையரங்கம் அமைக்க முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். 

11:11 January 08

சோளிங்கர் எம்எல்ஏ அரவிந்த் கேள்வி: வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் பாலவாக்கத்தில் துணை மின்நிலையம் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அங்கு துணை மின் நிலையம் அமைக்கபடுமா?

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பதில்:  வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை  ஆகியப் பகுதிகளில் கோடை காலத்தில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் தட்டுப்பாடு ஏற்படுவதால்   அதற்கு மாற்று வழி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும்,  சட்டமன்ற உறுப்பினர் இடத்தை தேர்வு செய்து கொடுத்தால் துணை மின் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். 

10:59 January 08

 திருத்தணி எம்எல்ஏ நரசிம்மன் கேள்வி விவசாயிகள் நிறைந்த பூனி மாங்காடு கிராமத்தில் மின் தட்டுப்பாட்டை குறைக்க  அப்பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி பதில்:  குறைந்த மின் அழுத்தத்தை போக்க மின் மாற்றி அமைக்கப்படும் என்றும், மின்சார வாரியத்திற்கு இடத்தை தேர்வு செய்தால் துணை மின் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும். 

10:38 January 08

திமுக எம்எல்ஏ அன்பழகன் கேள்வி: ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா?

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில்: ஓய்வூதியம் பெறுவோரின் பெற்றோர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.  ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் 2014 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 2 லட்சம் ரூபாயாக இருந்த காப்பீட்டுத்தொகை பின்னர் 4 லட்சமாக உயர்த்தப்பட்டது.  2022 ஜூன் 30-ஆம் தேதி வரை இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 988 மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு 7.30 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுகின்றனர்.

10:31 January 08

இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது குறித்தும், உள்ளாட்சித் தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற்றது குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்து உரையாற்றினார். 

10:04 January 08

சென்னை: கேள்வி நேரத்துடன் 2020ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் நிகழ்வு இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது.

நடப்பு ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. 

Intro:Body:

tn assembly live

Conclusion:
Last Updated : Jan 8, 2020, 3:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.