ETV Bharat / bharat

காவல்துறையினரின் மிருகத்தனமான செயல் ஒரு பெருங்குற்றம் - சாத்தான்குளம் சம்பவம் குறித்து ராகுல் காந்தி

Raga
Raga
author img

By

Published : Jun 26, 2020, 6:50 PM IST

Updated : Jun 26, 2020, 8:45 PM IST

18:42 June 26

காவல்துறையினர் மிருகத்தனமான செயலில் ஈடுபட்டதன் மூலம் பெருங்குற்றத்தை செய்துள்ளனர் என சாத்தான்குளம் சம்பவத்தை குறிப்பிட்டு ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதியாக அழைத்துச் செல்லப்பட்ட தந்தையும், மகனும் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து வரும் லாக்அப் மரணங்கள் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

காவல்துறையினர் இந்த மிருகத்தனமான செயலில் ஈடுபட்டதன் மூலம் ஒரு பெருங்குற்றத்தை செய்துள்ளனர் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நமது பாதுகாவலர்களே அடக்குமுறையாளர்களாக மாறுவது துயரமான ஒன்று. காவல்துறையினர் இந்த மிருகத்தனமான செயலில் ஈடுபட்டதன் மூலம் ஒரு பெருங்குற்றத்தை செய்துள்ளனர். 

பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் அரசு நீதியை நிலைநாட்டும் வகையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

Last Updated : Jun 26, 2020, 8:45 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.