ETV Bharat / breaking-news

கோரிக்கைகளை ஏற்காவிட்டால் எதிர் பிரச்சாரம் - அய்யாக்கண்ணு

Breaking News
author img

By

Published : Feb 9, 2019, 5:31 PM IST

2019-02-09 16:02:08

திருச்சி: விவசாயிகள் வாழ்நாள் முழுவதும் கடன்காரர்களாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு விரும்புவதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. 
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விவசாய விளைபொருட்கள் லாபகரமான விலை வழங்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய அனைத்து வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இதை ஏற்க மறுக்கும் கட்சிகளை எதிர்த்து விவசாயிகள் பிரச்சாரம் மேற்கொள்வார்கள்.

 மத்திய பட்ஜெட்டிலும், மாநில பட்ஜெட்டிலும் விவசாயிகளுக்கு எந்த விதமான அறிவிப்புகளும் இல்லை. விவசாயிகள் வாழ்நாள் முழுவதும் கடன்காரர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு 10,000 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

கேரளா, கர்நாடகாவில் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதை தடுத்து தமிழகத்திற்கு திருப்பி விட வேண்டும். இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம் நடத்தப்படும்.

அதேபோல் கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு ஆலைகள் ரூ 400 கோடி வரை நிலுவை வைத்துள்ளது. இந்த தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் 25 ஆம் தேதிக்கு மேல் சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்தப்படும். மார்ச் 28, 29ம் தேதிகளில் டெல்லியிலும் போராட்டம் நடத்தப்படும்", என்றார்.

Intro:திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்

Body:திருச்சி:
நாடாளுமன்ற தேர்தலில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்கும் கட்சிகளுக்கு மட்டுமே ஆதரவு அளிக்கப்படும் என்று அய்யாக்கண்ணு கூறினார்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடந்தது.
இதன் பின்னர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறுகையில்,
விவசாய விளைபொருட்கள் லாபகரமான விலை வழங்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய அனைத்து வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கும் கட்சிக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில்விவசாயிகள் வாக்களிப்பார்கள். இதை ஏற்க மறுக்கும் கட்சிகளை எதிர்த்து விவசாயிகள் பிரச்சாரம் மேற்கொள்வார்கள். மத்திய பட்ஜெட்டிலும், மாநில பட்ஜெட்டிலும் விவசாயிகளுக்கு எந்த விதமான அறிவிப்புகளும் இல்லை. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தமிழகத்தில் பெய்யும் மழை கேரளாவுக்கும், கர்நாடகாவுக்கும் சென்று கடலில் கலக்கிறது.
இந்த மழை நீரை தடுத்து தமிழகத்திற்கு திருப்பி விட வேண்டும். இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சென்னை தலைமைச் முற்றுகையிட்டு தூக்குப்போட்டு தற்கொலை நடத்தப்படும். குடிநீருக்கு கூட தண்ணீர் இன்றி அவதிப்படும் சூழல் உருவாகியுள்ளது. தமிழக அரசு இதை கண்டுகொள்ளவில்லை. விவசாயிகள் வாழ்நாள் முழுவதும் கடன்காரர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு 10,000 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல் கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு ஆலைகள் ரூ 400 கோடி வரை நிலுவை வைத்துள்ளது. இந்த தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் 25ஆம் தேதிக்கு மேல் சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்தப்படும் மார்ச் 28, 29ம் தேதிகளில் டெல்லியிலும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Conclusion:சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு தற்கொலை போராட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.