ETV Bharat / bharat

45 மணிநேர போராட்டம்: மலை இடுக்கில் சிக்கிய இளைஞர் மீட்பு - Palakkad

கேரளாவில் நண்பர்களுடன் மலையேற்றத்தில் ஈடுபட்ட இளைஞர் எதிர்பாராத விதமாக மலை இடுக்கில் சிக்கிக்கொண்ட நிலையில், மீட்புப்படையினரால் 45 மணி நேரத்திற்கு பின் அந்த இளைஞர் மீட்கப்பட்டுள்ளார்.

Youth trapped in hill cleft
மலை இடுக்கில் சிக்கிய இளைஞர்
author img

By

Published : Feb 9, 2022, 11:02 AM IST

கேரளா: பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த பாபு (23) என்பவர் தனது நண்பர்களுடன் மலம்புழா பகுதியில் சேரடு, குரும்பாச்சி மலைக்கு மலையேற்றத்திற்காக சென்றுள்ளார். மலையேற்றத்தின்போது பாபுவுடன் சென்ற நண்பர்கள் இருவரும் பாதியிலேயே மலையேற்றத்திலிருந்து திரும்பிவிட்டனர்.

பாபு மட்டும் தொடர்ந்து மலையேற்றத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கால் இடறி விழுந்து, மலை இடுக்கில் சிக்கிக்கொண்டார். இதையடுத்து தனது செல்போன் மூலமாக காவல் துறையினருக்கும், தனது நண்பர்களுக்கும், தான் மலை இடுக்கில் சிக்கிக்கொண்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.

ஹெலிகாப்டரும் பயனிளிக்கவில்லை

பாபுவை மீட்க, தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பாலக்காடு மாவட்ட ஆட்சியர் முருன்மாயி ஜோஷியின் கோரிக்கையை அடுத்து, கடலோரக் காவல் படையினரும் ஹெலிகாப்டர் மூலம் அப்பகுதிக்கு வந்தனர். ஆனால், மலை இடுக்குப் பகுதி தாழ்வாக இருக்கும் காரணத்தால் ஹெலிகாப்டர் கொண்டு மீட்க முடியாத சூழல் ஏற்பட்டது.

மலை இடுக்கில் சிக்கிய இளைஞர்

பின்னர், மீட்புப்படையினர் மலையின் மீது ஏறி மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் இந்த முயற்சியும் தோல்வியடைந்தது. பின்னர், பாபுவுக்கு உணவு மற்றும் குடிநீர் ஆகியவற்றை வழங்கினர். மாவட்ட ஆட்சியரும் சம்பந்தப்பட்ட அலுவலர்களும் சம்பவ இடத்தில் முகாமிட்டு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், இளைஞரை மீட்க ராணுவத்தினரின் உதவியைக் கோரினார்.

3 அணிகள் விரைந்தன

இதையடுத்து, பெங்களூருவில் இருந்து மலையேற்றத்தில் சிறப்பு வாய்ந்த ஓர் அணியும், தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டனில் இருந்து ஓர் அணியும், இந்திய விமானப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். முதலமைச்சர் பினராய் விஜயன் அறிவுறுத்தலின்படி, மேஜர் தினேஷ் மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் செயல்பட்டார்.

முன்னதாக, மீட்பு நடவடிக்கை குறித்து தகவல்களை 10 நிமிடத்திற்கு ஒரு முறை, சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகரனிடம் தெரிவிக்க மேஜர் தினேஷ் பாஸ்கருக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், 45 மணிநேர போராட்டத்திற்கு பிறகு, மலை இடுக்கில் சிக்கியிருந்த பாபுவை மீட்புப் படையினரின் இன்று (பிப். 9) காலையில் மீட்டனர். மேலும், குரும்பாச்சி மலைப்பகுதியில் பொதுமக்கள் யாரும் மலையேற்றத்திற்குச் செல்ல வேண்டாம் எனவும் இப்பகுதியில் காட்டு விலங்குகள் நடமாடும் பகுதி என்றும் வனத்துறை ஏற்கெனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாலாற்றில் குடிபோதையில் விழுந்த இளைஞர்: மீட்புப் பணி தீவிரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.