மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலம், கோல்ஹாபூரைச் சேர்ந்தவர், சௌரப் கஸ்பேகர். இவரும் சாங்லி பகுதியைச் சேர்ந்த உத்கர்ஷா என்ற பெண்ணும் ஒரே பொறியியல் கல்லூரியில் படித்து வந்துள்ளனர். இந்தநிலையில், சௌரப் கஸ்பேகர் வீட்டில் திருமணம் குறித்து பேசியுள்ளனர். அப்போது அவர் உத்கர்ஷா குறித்து தெரிவித்துள்ளார்.
![பேனர் வைத்து காதலை வெளிப்படுத்திய இளைஞர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/mh-kop-02-hording-propose-story-2022-7204450_19052022131556_1905f_1652946356_343.jpg)
பெற்றோர் சம்மதம் தெரிவித்ததையடுத்து, சௌரப் கஸ்பேகர் உத்கர்ஷாவிடம் தன் காதலை புதுமையாக சொல்ல வேண்டும் என்று விரும்பியுள்ளார். இதையடுத்து, சாங்லி-கோலாப்பூர் நெடுஞ்சாலையில் 50 x 25 அளவு பேனரில் 'உத்கர்ஷா மேரி மீ - சௌரப்' என்ற வாசகத்துடன் பேனர் வைத்துள்ளளார். இந்த பேனர் முன் சௌரப் உத்கர்ஷாவிடம் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதையடுத்து, உத்கர்ஷா சம்மதம் தெரிவித்துள்ளார். சௌரப் கஸ்பேகர்-உத்கர்ஷா திருமணம் மே 27ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று தெரிவிக்கப்பபட்டுள்ளது. சௌரப், உத்கர்ஷா இருவரும் தற்போது எம்.டெக்., படித்து வருகின்றனர்.
![பேனர் வைத்து காதலை வெளிப்படுத்திய இளைஞர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/mh-kop-02-hording-propose-story-2022-7204450_19052022131556_1905f_1652946356_155.jpg)
இதையும் படிங்க: இந்தியாவில் முதல் முறையாக கேரள அரசின் OTT தளம்