ETV Bharat / bharat

ராஜஸ்தானில் நடந்த கொடூரம்: தலை துண்டிக்கப்பட்டு டெய்லர் கொலை! - ராஜஸ்தானில் தலை துண்டிக்கப்பட்டு டெய்லர் கொலை

ராஜஸ்தானில் டெய்லர் ஒருவர் நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்ததால், ஆத்திரமடைந்த இருவர் டெய்லரை கொடூரமாக கொலை செய்து, வீடியோ வெளியிட்ட சம்பவம் அங்கு பெரும்பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் நடந்த கொடூரம்
ராஜஸ்தானில் நடந்த கொடூரம்
author img

By

Published : Jun 28, 2022, 10:04 PM IST

உதய்பூர் (ராஜஸ்தான்): உதய்பூர், தன் மண்டி பகுதியில் கன்ஹைய லால் என்பவர் டெய்லர் கடை நடத்தி வந்தார். நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக் கருத்து தெரிவித்த பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக கன்ஹைய லால் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று (ஜூன் 28) கன்ஹைய லாலின் கடைக்குள் புகுந்த இரண்டு பேர் கூர்மையான ஆயுதங்களால் கன்ஹைய லாலைத் தாக்கி, தலையை துண்டித்து, வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் வீடியோ வேகமாகப் பகிரப்பட்ட நிலையில் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இந்த கொடூர கொலையைக் கண்டித்து அப்பகுதி வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் காவல் துறையினர் கொலை தொடர்பாக முகமது ரியாஸ் மற்றும் அவரது நண்பர் ஆகிய இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

வீடியோ பதிவு செய்து வெளியீடு: இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், "டெய்லரை கொலை செய்து வீடியோ வெளியிட்ட முகமது ரியாஸ் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், ரியாஸ் மற்றும் அவரது நண்பர் இருவரும் துணி அளவு கொடுப்பது போல் கடைக்குள் வந்துள்ளனர். ஒருவருக்கு கன்ஹைய லால் அளவு எடுக்கிறார், மற்றொருவர் வீடியோ பதிவு செய்கிறார். இதையடுத்து திடீரென கன்ஹைய லாலை வெளியே இழுத்து கூர்மையான ஆயுதங்கள் கொண்டு கழுத்தில் தாக்குகின்றனர். பின்னர், இருவரும் தங்களை முகமது ரியாஸ் மற்றும் அவரது நண்பர் என அடையாளம் சொல்லி எச்சரிக்கை விடுத்து, டெய்லரின் தலையை துண்டித்தனர்" என்று காவல் துறையினர் கூறுகின்றனர்.

அசோக் கெலாட் கண்டனம், வேண்டுகோள்: இந்த சம்பவத்தால் கோபமடைந்த அப்பகுதி வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தினர். நகரின் முக்கியப் பகுதிகளில் இணையதள சேவைகள் நிறுத்தப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 600 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜி கூறுகையில், ஜெய்ப்பூரில் இருந்து இரண்டு ஏடிஜிபிகள், ஒரு எஸ்.பி., மற்றும் 600 கூடுதல் காவல் படையினர் உதய்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்த கொடூர சம்பவத்திற்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், "அனைத்து தரப்பினரும் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். குற்றத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உரிய விசாரணை நடத்தப்படும். குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்" என்றார்.

ஒன்றிய அமைச்சரும், பாஜக தலைவருமான பூபேந்தர் யாதவ் உதய்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, அசோக் கெலாட் அரசையும் விமர்சனம் செய்து ட்வீட் செய்துள்ளார்.

ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசியும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், வன்முறைகளை எதிர்ப்பதே எங்களின் நிலைப்பாடு, சட்டத்தை யாரும் கையில் எடுக்க முடியாது எனவும்; ராஜஸ்தான் அரசு குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.