ETV Bharat / bharat

பைக் திருடியதாக சந்தேகம்... இளைஞரை அடித்தே கொன்ற கும்பல்...

கேரளாவில் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஏற்பட்ட சந்தேகத்தால் 27 வயது இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Youth lynched in Palakkad over suspicion of bike theft

author img

By

Published : Apr 8, 2022, 11:18 AM IST

கேரளா: பாலக்காடு மாவட்டம் ஒலவக்கோடு பகுதியில் உள்ள மதுபான பாருக்கு சென்ற ஒரு கும்பல் தங்களது இருசக்கர வாகனங்களை பார்கிங்கில் நிறுத்தியது. அதில் ஒரு வாகனம் காணமால் போகவே, பாரின் சிசிடிவி காட்சிகளை பார்த்த கும்பல் ஒருவர் மீது சந்தேகப்பட்டது.

அந்த சந்தேகத்தின் அடிப்படையில், அந்த பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை பிடித்து அடித்துள்ளனர். இந்த தாக்குதில் அந்த இளைஞர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், "இந்த சம்பவம் நள்ளிரவு 1.30 மணிக்கு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த இளைஞர் பாலக்காடு அருகே உள்ள மலம்புழாவைச் சேர்ந்த ரஃபீக் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் பலருக்கு தொடர்புள்ளது. இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளோம். அதனடிப்படையில் குற்றவாளிகளை தேடிவருகிறோம். ரஃபீக்கின் உடல் உடற்கூராய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கூட்டு பாலியல் வழக்கில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகள் கண்டுபிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.