ETV Bharat / state

சிங்கப்பூர் டூ சென்னை.. ரூ.15 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்.. 25 பேர் கைது! - GOLD SMUGGLING IN CHENNAI AIRPORT

சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு விமானங்களில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்புடைய 20 கிலோ தங்கத்தை விமான நிலைய போலீசார் கைப்பற்றி 8 பெண்கள் உட்பட 25 கடத்தல்காரர்களை கைது செய்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்
சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 11, 2024, 3:15 PM IST

சென்னை: சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில், மத்திய வருவாய் புலனாய் துறை தனிப்படையினர், நேற்று (நவ.10) இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரகசியமாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று இரவு 11 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு ஸ்கூட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்துள்ளது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதேபோல், சிங்கப்பூரில் இருந்து நள்ளிரவில் சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானத்தில் வந்த பயணிகளிடமும் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

தொடர்ந்து, இன்று அதிகாலை சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடமும் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். 3 விமானங்களில் வந்த பயணிகளிடம் நடத்திய சோதனையில், சந்தேகத்திற்கு இடமாக இருந்த 25 பயணிகளை வெளியில் அனுப்பாமல் விமான நிலையத்தில் வைத்து, அவரது உடைமைகளை தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: துபாயில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்திய குருவி கைது.. சிக்கியது எப்படி?

இதில், 25 பயணிகளின் உடைமைகளில் தங்கக் கட்டிகள், தங்க பசைகள் மற்றும் தங்க செயின்கள் மறைத்து கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் அனைவரும் சென்னை உட்பட தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதில், 8 பேர் பெண் பயணிகள், மற்ற 17 பேர் ஆண் பயணிகளாவர். இதனையடுத்து, அந்த 25 பயணிகளிடம் இருந்து 20 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.15 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, இந்த கடத்தல் குருவிகள் 25 பேரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், சென்னையில் உள்ள முக்கிய கடத்தல் ஆசாமிகள் சிலர், இவர்களை சிங்கப்பூருக்கு கடத்தல் குருவிகளாக அனுப்பி தங்கத்தை கடத்தி வந்ததாகவும், ஒரே விமானத்தில் வந்தால் சுங்கச் சோதனையில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக 3 விமானங்களில் வந்ததும் தெரியவந்தது.

இதில், இரண்டு பயணிகளிடம் ஒரு கிலோவுக்கு அதிகமான தங்கமும் மற்ற 23 பயணிகளிடமும் ஒரு கிலோவுக்கு குறைவான தங்கம் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்கம் கடத்தி வந்த சம்பவத்தில், சென்னை விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறையினர் உட்பட வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.