ETV Bharat / sports

"சிஎஸ்கேவில் இன்னும் எத்தனை ஆண்டுகள் தோனி விளையாடுவார்?"- சிஇஓ காசி விஸ்வநாதன் பேச்சு! - CSK CEO ON DHONI IPL FUTURE

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் வருங்காலம் குறித்து அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Kasi Vishwanathan - Stephen Fleming (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 11, 2024, 3:30 PM IST

ஐதராபாத்: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கு இப்போதே எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. அண்மையில் ஐபிஎல் அணிகள் தக்கவைப்பு வீரர்களின் பட்டியலை வெளியிட்டன. இந்த மாத இறுதியில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறுகிறது.

அடுத்தடுத்து ஐபிஎல் அப்டேட்டுகள் வெளியாகி கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகத்தில் வைத்துள்ளன. எந்த சீசனிலும் இல்லாத வகையயில் வரும் ஐபிஎல் தொடரில் எதிர்பாராத பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கும் மேலாக சென்னை அணியில் இந்த சீசனில் எம்.எஸ் தோனி விளையாடுவார் உறுதி செய்யப்பட்டது.

சிஎஸ்கே ரசிகர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக இது மாறியது. இந்நிலையில், சென்னை அணியில் எம்.எஸ் தோனியின் வருங்காலம் குறித்து அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் மனம் திறந்து பேசியுள்ளார். அம்பத்தி ராயுடுவுடனான தனியார் ஊடக நேர்காணில் பேசிய காசி விஸ்வநாதன், தோனிக்காக சென்னை அணியின் கதவு எப்போதும் திறந்து இருக்கும் என்றார்.

மேலும், எம்.எஸ் தோனி சரியான நேரத்தில் மிகச் சரியான முடிவு எடுக்கக் கூடிய நபர் என்றார். தோனியை பொறுத்த வரையில், அவர் எல்லாவற்றையும் தன்னுக்குள்ளேயே வைத்துக் கொள்ளக் கூடியவர் என்பது அனைவருக்கும் தெரியும், கடைசி நேரத்தில்தான் அதை வெளிப்படுத்துவார் என்றார்.

சென்னை அணியின் மீது அவருக்கு இருக்கும் ஆர்வத்தால், தனது கடைசி ஆட்டத்தை சென்னையில் விளையாட விரும்புவதாக முன்னர் ஒரு பேட்டியில் தெரிவித்து உள்ளதாக காசி விஸ்வநாதன் குறிப்பிட்டார். சென்னை அணியை பொருத்தவரை அவர் வழக்கம் போல் தொடருவார் என்று நம்புகிறோம், என்றும் தோனி விளையாட விரும்பும் வரை சென்னை அணியின் கதவுகள் அவருக்காக திறந்தே இருக்கும் என்று கூறினார்.

கிரிக்கெட் மீது கொண்டு இருக்கும் அவரது ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பின் காரணமாக எப்போது தோனி சரியான முடிவையே எடுப்பார் என தான் நம்பிக்கை கொண்டு இருப்பதாக காசி விஸ்வநாத கூறினார். 2024 ஐபிஎல் சீசனில் சென்னை அணி எதிர்பாராத விதமாக குரூப் சுற்றுடன் வெளியேறியது.

இந்நிலையில் 2025 ஐபிஎல் சீசனில் விளையாடுவதற்காக தோனி 4 கோடி ரூபாய் ஊதியத்தில் அன்கேப்டு வீரராக தக்கவைக்கப்பட்டுள்ளார். 2019ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரைஇறுதி ஆட்டத்தில் கண்ட தோல்வியுடன் கிரிக்கெட்டில் இருந்து விலகிய 2020 ஆம் ஆண்டு தனது ஓய்வு முடிவை அறிவித்தார். தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மட்டும் அவர் விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க: "இந்திய கிரிக்கெட்டில் உங்களுக்கு என்ன வேலை?"முன்னாள் வீரரை விளாசிய கம்பீர்! யார் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.