ETV Bharat / bharat

தேவ கவுடா பேரனுக்கு ஜாமின் மறுப்பு! உச்சநீதிமன்றம் சொன்ன காரணம் என்ன? - BAIL PETITION OF PRAJWAL REVANNA

நீங்கள் மிகவும் சக்தி வாய்ந்த நபர் என கூறிய உச்சநீதிமன்றம் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமின் கொடுக்க மறுத்துவிட்டது.

ETV Bharat
பிரஜ்வல் ரேவண்ணா, தவறான வீடியோக்களுக்காக சிறப்பு புலானாய்வுக்குழுவால் கைது செய்யப்பட்ட பின்னர் பெங்களூரு விமான நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் போது எடுத்த புகைப்படம். மே 31, 2024. (ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 11, 2024, 2:52 PM IST

டெல்லி: பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில், முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்க மறுத்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் இணையதளத்தில் மக்களவை தேர்தல் நேரத்தின் போது கசிந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வந்தன.

உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பெலா எம் திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர ஷர்மா அமர்வு முன்பு ரேவண்ணாவின் மனு விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் பாலாஜி ஸ்ரீனிவாசன் மூலமாக ரேவண்ணா தமது மனுவை தாக்கல் செய்திருந்தார். மூத்த வழக்கறிஞரான முகுல் ரோகத்கி, ரேவண்ணாவின் சார்பில் வாதாடிய போது, குற்றச்சாட்டுக்கள் மிகவும் தீவிரமானவை என்றாலும், 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கும் சட்டப்பிரிவான ஐ.பி.சி. 376 சேர்க்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். தமது கட்சிக்காரர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு இந்த குற்றச்சாட்டுக்களால் தேர்தலில் தோல்வியடைந்தார் எனவும் குறிப்பிட்டார்.

"நீங்கள் மிகவும் சக்தி வாய்ந்த நபர்" என நீதிபதி திரிவேதி குறிப்பிட்ட நிலையில், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதை ரோகத்கி சுட்டிக்காட்டினார். "நான் வெளிநாட்டில் இருந்தேன். திரும்ப வந்ததுமே சரணடைந்தேன். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இதற்கு முன்பு எம்.பி.யாக இருந்துள்ளேன். தேர்தலில் போட்டியிட்டிருக்கிறேன். இவை அனைத்தையும் இதனால் இழந்திருக்கிறேன்" என பிரஜ்வல் தரப்பு வாதங்களை ரோகத்கி முன்வைத்தார்.

இருப்பினும் ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்த நிலையில், மனுவை டிஸ்மிஸ் செய்வதாக நீதிபதி திரிவேதி அறிவித்தார்.

தன்னுடைய கட்சிக்காரர் 6 மாதங்களுக்குப் பின் மீண்டும் விண்ணப்பிக்க முடியுமா? என வழக்கறிஞர் ரோகத்கி கேட்ட நிலையில், இது குறித்து ஏதும் கூற முடியாது என நீதிபதி திரிவேதி அறிவித்தார்.

பிரஜ்வாலின் தந்தையான எச்.டி.ரேவண்ணாவும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு ஜாமின் கிடைத்தது. பிரஜ்வாலின் தாயார் பவானி ரேவண்ணா மீதும் புகாரில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், அவர் முன்ஜாமின் பெற்றிருந்தார்.

ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ரேவண்ணா அக்டோபர் 21ம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார்.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா ரேவண்ணா மீதான முதன்மையான குற்றச்சாட்டுக்களாக விரும்பத்தகாத காமம் இருப்பதாக குற்றம் சாட்டினார். இது சமூகத்தில் தவறான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் சாடினார்.

முன்னதாக ஜெர்மனியிலிருந்து நாடு திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். பல்வேறு பெண்களுடன் தொடர்புபடுத்தி பல வீடியோக்கள் இணையத்தில் உலா வந்த நிலையில் 35 நாட்கள் ஜெர்மனியில் ரேவண்ணா தங்கியிருந்தார். நடந்து முடிந்த தேர்தலில் 40,000 வாக்கு வித்தியாசத்தில் பிரஜ்வல் ரேவண்ணா தோல்வியடைந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.