ஜெய்ப்பூர் : இன்றைய நவநாகரீக உலகில் செல்போன், ப்ளூடூத் இயர்போன் ஆகியவை அத்தியாவசியமாகிவிட்டன.
இதை ஸ்டைல் என்று நம்பும் சிலரையும் நாம் அன்றாடம் வாழ்வில் பார்க்க முடிகிறது.
இந்நிலையில் இளைஞர் ஒருவரின் உயிரை எமனாக மாறி எடுத்துள்ளது ப்ளூடூத் இயர்போன். நெஞ்சை பதைபதைக்க செய்யும் இந்தச் சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது.
ஜெய்ப்பூர் சாமு (Chaumu ) நகரத்தில் உள்ள உதய்புரியா கிராமத்தில் வசித்துவந்தவர் ராஜேஷ் நாகர்.
சம்பவத்தன்று இவர் பயன்படுத்திய ப்ளூடூத் இயர்போன் வெடித்து சிதறியது. இதில் பலத்த காயமுற்ற ராஜேஷ் நாகரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ராஜேஷ் நாகர் உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பு குறித்து மருத்துவர் கூறுகையில், “ப்ளூடூத் இயர்போன் வெடித்து சிதறியதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது” என்றார்.
இதையும் படிங்க : இயர்ஃபோன் அதிகம் பயன்படுத்தும் நபரா நீங்கள்? இதை முதலில் தெரிஞ்சிக்கோங்க!