ETV Bharat / bharat

செல்போன் தொலைந்த விரக்தியில் இளைஞர் தற்கொலை - செல்போன் தொலைந்த விரக்தியில் இளைஞர் தற்கொலை

டேராடூன்: செல்போன் தொலைந்த விரக்தியில் இளைஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

Youth commits suicide after losing smartphone

author img

By

Published : Mar 20, 2021, 6:06 PM IST

உத்தரகாண்ட் மாநிலம், ஹால்ட்வானி மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது இளைஞர் சோம்பீர். இவர் ஹௌலபார் என்ற கிராமத்தில் வேளாண்மை செய்துவந்தார். இந்நிலையில் இவரது செல்போன் காணாமல்போனதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சோம்பீர் விஷம் குடித்துள்ளார்.

இதையறிந்த சுற்றத்தார் அவரை மீட்டு, ஹால்ட்வானியில் உள்ள சுசிலா அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி சோம்பீர் உயிரிழந்துள்ளார்.

Youth commits suicide
தற்கொலை எதற்கும் தீர்வல்ல...

இது தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்றனர். அங்கு விசாரணை நடத்திய காவல் துறையினர், உயிரிழந்த சோம்பீர் உடலை உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க:பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்த ஆணின் உறுப்பை துண்டித்த பெண்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.