ETV Bharat / bharat

’பிரதமரின் ட்வீட் கேரள மக்களின் இதயங்களை மகிழ்வித்துள்ளது’ - சசி தரூர் - அண்மை செய்திகள்

கேரள ஹாக்கி வீரரை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக ட்வீட் செய்திருந்த நிலையில், பிரதமரின் ட்வீட் கேரள மக்களின் இதயங்களை மகிழ்வித்திருப்பதாக திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.

சசி தரூர்
சசி தரூர்
author img

By

Published : Aug 7, 2021, 5:57 PM IST

ஜெர்மனிக்கு எதிரான ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேரள வீரர் பிஆர் ஸ்ரீஜேஷை வாழ்த்தி பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் ட்வீட் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சசி தரூர், ”நாட்டை பாதுகாப்பவர்களை போல கோல் அடிப்பவர்களும் முக்கியமானவர்கள் என்பதை பிரதமரின் ட்வீட் நினைவூட்டியுள்ளது” என ட்வீட் செய்துள்ளார்.

சசி தரூர்
சசி தரூர் ட்வீட்

கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஸ்ரீஜேஷ் இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனாவார். முன்னதாக வியாழக்கிழமை (ஆக.05) நடந்த போட்டியின் இறுதி வினாடிகளில் அவர் அடித்த கோல் இந்திய அணி பதக்கம் வெல்வதற்கு பெரும் உதவியாய் அமைந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் எம்பி சசி தரூரின் இந்த ட்வீட் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இதையும் படிங்க: நிறைவேறிய நூற்றாண்டு கனவு; தங்கம் வென்றார் நீரஜ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.