ஹைதராபாத்: இன்றைய காலகட்டத்தில் தொழிலதிபர் முதல் தொழிலாளர்கள் வரை வங்கிக் கடன் பெற கிரெடிட் அல்லது சிபில் ஸ்கோர் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. எதன் அடிப்படையில் கிரெடிட் அல்லது சிபில் ஸ்கோர் கணக்கிடப்படுகிறது. சிபில் ஸ்கோர் குறைவதன் காரணத்தால் கடன் பெறுவதில் ஏன் சிக்கல் நிலவுகிறது என பலருக்கு தெரியாத வகையில் உள்ளது.
இந்த சிபில் அல்லது கிரெடிட் ஸ்கோர்கள் மூலம் ஒருவரை கடனை திருப்பிச்செலுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் கணக்கிடப்படுகின்றன. முந்தைய காலகட்டத்தில் ஒருவருக்கு கடன் வழங்கும்போது அவர் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்த பின் கடன் வழங்குவர். நடப்பு காலகட்டத்தில் அந்த பணியை சிபில் அல்லது கிரெடிட் ஸ்கோர் செய்கின்றன.
கடன் பெறுவர் குறித்த நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்தத் தவறியது, நீண்ட காலமாக கடன் கொண்டிருப்பது, வட்டிக்கான நேரம் தவறுதல் உள்ளிட்டவைகளை குறித்து வைத்து அதற்கேற்றார் போல் பயனாளிக்கு சிபில் ஸ்கோர் வழங்கப்படுகின்றன. இந்த சிபில் ஸ்கோரை அடிப்படையாக கொண்டு வங்கிகள் பயனாளிகளுக்கு கடன் வழங்குகின்றன.
சிபில் ஸ்கோரை பொறுத்தவரை 750 புள்ளிகளுக்கு மேல் இருந்தால் நல்ல நிலை எனக் கருதப்படுகிறது. இந்த புள்ளிகளை கொண்ட பயனாளி குறித்த நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்துபவர், நீண்ட நாள் கடன் இழுத்தடிப்பு செய்யாதவர் உள்ளிட்டவைகளை குறிக்கிறது. இந்தப் புள்ளிகளை அடிப்படையாக கொண்டு வங்கிகள் பயனாளிகளுக்கு கடன் வழங்குகின்றன.
அதேநேரம் கிரெடிட் ஸ்கோர் 350 முதல் 500 புள்ளிகளாக இருக்கும்போது மோசமான நிலை எனக் கூறப்படுகிறது. இந்த அளவிலான சிபில் ஸ்கோர் கொண்டவர்கள் கடன் பெற பல வகையிலான சிக்கல்களை சந்திக்கின்றனர். கிரெடிட் கார்டு கடன் அல்லது அடமானத்திற்கு விண்ணப்பிக்கும் போதும் இதே நடைமுறை தான் பின்பற்றப்படுகின்றன.
இதுபோன்ற கிரெடிட் ஸ்கோர்கள் கடனளிப்பவருக்கு, பயனாளி மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது. கடன் வாங்க விரும்புகிறவர்கள் சிபில் ஸ்கோரை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும், சிபில் ஸ்கோர் குறைவான அளவில் இருக்கும் பட்சத்தில் கடன் பெறுவதில் பல்வேறு சிக்கல் சிரமங்கள் ஏற்படும்.
அதிக சிபில் ஸ்கோர் வைத்திருக்கும் பட்சத்தில், அது பல்வேறு கடன் திட்டங்களில் மானியங்கள் பெறுவதை எளிதாக்குகின்றன. சிபில் ஸ்கோர் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்றால் அனைத்து கடன்களையும் சரியான நேரத்தில் செலுத்தப்படுவதையும், நீண்ட காலத்திற்கு கடன்கள் ஏதும் நிலுவையில் இல்லாததையும் உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும் கிரெடிட் கார்டுக்கான முழு வரம்பைப் பயன்படுத்தும்போது சிபில் ஸ்கோர் பாதிப்பதற்கான சூழல் நிலவுகிறது. கடன் பயன்பாட்டு விகிதம் (சி.யூ.ஆர்) சிபில் ஸ்கோரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கிரெடிட் கார்டை எவ்வளவு பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து சிபில் ஸ்கோரில் மாற்றம் ஏற்படும்.
தேவையில்லாமல் கடன் பெறுவது, கிரெடிட் கார்டை எப்போதும் உச்சபட்ச வரம்பிற்கு உள்ளாகவே பயன்படுத்துவது, குறிப்பிட்ட நேரத்தில் கடன்களை திருப்பிச் செலுத்துதல், நீண்ட கால கடன் தவணைகளை தவிர்த்தல் உள்ளிட்டவைகள் மூலம் குறைந்த சிபில் ஸ்கோரை மீண்டும் உச்சத்திற்கு கொண்டு வர முடியும்.
அதேநேரம் இழந்த சிபில் ஸ்கோரை ஒரே இரவில் மீண்டும் உச்சத்திற்கு கொண்டு வர முடியாது என்பதால் படிப்படியாக தான் இந்த முயற்சிகள் மூலம் பயன்பெற முடியும். சரியான அளவில் சிபில் அல்லது கிரெடிட் ஸ்கோரை எப்போதும் கொண்டு செல்வது பல்வேறு பிரச்னைகளை தவிர்க்க சரியான தீர்வு என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "திருப்பதியில் ஓலை பெட்டியில் லட்டு வழங்க திட்டம்" - இதுக்கு இதான் காரணமா?