சிக்கமகளூரு: இன்று திருமணம் செய்யவிருந்த ஒரு இளைஞர் கரோனாவால் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் மாவட்டம் கொப்பா தாலுகாவின் தேவரகோடிகே கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
32 வயதான பிருத்விராஜ் என்பவருக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், பெங்களூரிலிருந்து பத்து நாள்களுக்கு முன்பு தேவரகோடிகே கிராமத்திற்கு வந்திருந்தார்.
சில நாள்களுக்கு முன்பு, அவர் கரோனா சோதனை செய்துகொண்ட நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பிருத்விராஜின் உடல்நலம் நாளுக்கு நாள் மோசமடைந்துள்ளது. எனவே அவர் சிவமோகாவில் உள்ள மேகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் இன்று அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.