ETV Bharat / bharat

செஸ் ஒலிம்பியாட்: செயற்கை நகங்களில் செஸ் காயின் வரைந்து அசத்தும் பட்டதாரி பெண் - செஸ் ஒலிம்பியாட் 2022

சென்னையில் நடந்துவரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை வரவேற்கும் வண்ணம் பட்டதாரி பெண் ஒருவர் விதவிதமாக செயற்கை நகங்களில் செஸ் போர்டு காயின்கள் உள்ளிட்ட படங்களை வரைந்து வருகிறார்.

செஸ் ஒலிம்பியாட் - 2022 : செயற்கை நகங்களில் செஸ் காயின் வரைந்து அசத்தும் பட்டதாறி பெண்

author img

By

Published : Aug 5, 2022, 9:55 PM IST

புதுச்சேரி: சென்னையில் நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை வரவேற்கும் விதவிதமாக புதுச்சேரியைச் சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவர் செயற்கை நகங்களில் செஸ் போர்டு காயின்கள் உள்ளிட்டப் படங்களை வரைந்து அசத்தி வருகிறார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை பல்வேறு தரப்பினரும் பல்வேறு முறையில் வரவேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரியில் அரவிந்தர் வீதியில் நகை அலங்காரம் செய்து வரும் நந்தினி என்ற பட்டதாரி பெண் மாறுபட்ட முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் - 2022 : செயற்கை நகங்களில் செஸ் காயின் வரைந்து அசத்தும் பட்டதாறி பெண்

செஸ் போர்டு செஸ் காயின் மற்றும் செஸ் ஒலிம்பியாட் சின்னமான ’தம்பி’யின் படங்களை செயற்கை நகங்களில் துல்லியமாக வரைந்து அசத்தி வருகிறார். வித்தியாசமான முறையில் நகங்களில் அலங்காரம் செய்து வரும் இவரது முயற்சி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: போதைப்பொருட்களை ஒழிக்க அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.