உடுப்பி (கர்நாடகா): கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் இன்று (மே 22) அதிகாலை 3 மணியளவில் கார் ஒன்று தீப்பற்றி எரிவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது, காரில் இளம் பெண், ஆண் உடல்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து போலீசார் தரப்பில், "உயிரிழந்தவர்கள் 23 வயதான யஷ்வந்த் மற்றும் ஜோதி எனத் தெரியவந்துள்ளது. பெங்களூரு ஆர்டி நகர் பகுதியில் வசித்து வந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை என்று சந்தேகிக்கப்படுகிறது. இருவரும் தங்கள் பெற்றோருக்கு தகவல் அனுப்பிவிட்டு உயிரிழந்துள்ளனர்.
பெங்களூரு ஹெப்பால் காவல் நிலையத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு இவர்கள் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மே 21ஆம் தேதி யஷ்வந்த் மற்றும் ஜோதி ஹுசைன் என்பவரிடம் காரை வாடகைக்கு எடுத்துள்ளனர்.
மே 18ஆம் தேதியன்று இருவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். ஜோதி இன்டர்வியூக்கு செல்வதாகவும், யஷ்வந்த் வகுப்புக்கு செல்வதாகவும் பெற்றோரிடம் கூறி சென்றுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இளைஞர் உயிரிழப்பு: விஆர் மாலில் இயங்கி வந்த மங்கி பாருக்கு சீல் - 3 பேர் அதிரடி கைது!