ETV Bharat / bharat

வாரணாசியில், 'யோகி குண்டலம்' விற்பனை ஜோர்! - உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்

வாரணாசியில் யோகி குண்டலம் ஆபரணங்கள் விற்பனை களைகட்டியுள்ளன. இளைஞர்கள் பலரும் இந்த ஆபரணத்தை அணிய விரும்புகின்றனர்.

Yogi Kundal
Yogi Kundal
author img

By

Published : Mar 24, 2022, 8:04 PM IST

வாரணாசி : சாமியார் கோலமிட்டு, கனத்த காவி உடையணிந்து கம்பீரமாக அரசியலில் வலம்வருபவர் யோகி ஆதித்யநாத். அதிரடி அரசியலுக்கு பெயர்போன இவர் காதில் குண்டலம் என்னும் காதணியும் அணிந்திருப்பார். இது பொதுவாக துறவிகள் அணியும் ஒரு ஆபரணமாகும்.

யோகி குண்டலம் : இந்தக் குண்டலம் என்னும் ஆபரணத்துக்கு கோயில் நகரமான வாரணாசியில் தற்போது கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. யோகி ஆதித்யநாத்தை பார்த்து அவரது ஆதரவாளர்களும் குண்டலத்தை காதுகளில் அணியத் தொடங்கியுள்ளனர்.

வாரணாசியில், 'யோகி குண்டலம்' விற்பனை ஜோர்!

இதனால் வாரணாசியில் குண்டலத்துக்கு திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளது என்று உள்ளூர் வணிகர்கள் கூறுகின்றனர். அண்மையில் உத்தரப் பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக மாபெரும் வெற்றியை பெற்றது.

விற்பனை ஜோர் : தொடர்ந்து யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை (மார்ச் 25) மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக பதவியேற்கிறார்.

Yogi Kundal, Yogi earrings a hit in Varanasi ahead of Adityanath's swearing-in
யோகி குண்டலம் அணிந்த இளைஞர்

இந்த நிலையில் யோகி குண்டலங்கள் வாரணாசி சந்தைகளில் பெருமளவு விற்பனையாகிவருகின்றன. இது குறித்து யோகி ஆதரவாளர்கள் கூறுகையில், “மாநிலத்தில் யோகி குண்டர்களை அழித்தார். அவர் காதுகளில் குண்டலம் அணிந்துள்ளார். நாங்களும் அவரது உடைகள், குண்டலம் உள்ளிட்ட பாணியை பயன்படுத்த விரும்புகிறோம்” என்றார்.

மோடிக்கு அடுத்து யோகி : குண்டலம் விற்பனை குறித்து உள்ளூர் வியாபாரி ஒருவர் கூறுகையில், “ஒரு நடிகரைப் போல் அரசியல்வாதி ஒருவரை மக்கள் கொண்டாடுவதை பார்க்கிறேன். மோடிக்கு பிறகு யோகியை மக்கள் கொண்டாடுகின்றனர்” என்றார்.

விற்பனைக்கு வந்துள்ள விதவிதமான குண்டலங்கள்

உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் லக்னோவில் உள்ள வாஜ்பாய் மைதானத்தில் பதவியேற்கிறார். இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். மேலும், பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்வுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 36 ஆண்டுகால தேர்தல் வரலாற்றை மாற்றிய யோகி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.