உத்தரப்பிரதேசம்: லக்கிம்பூர் கேரி பகுதியில் நடந்த வன்முறை நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த வன்முறை ஆளும் யோகி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என கூறிவருகின்றனர்.
இந்தநிலையில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பிரதமரின் கரிப் கல்யாண் அன்னயோஜனா திட்டத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டித்து அறிவித்துள்ளார். பிரதமரின் கரிப் கல்யாண் அன்னயோஜனா திட்டம், கரோனா காலத்தில் பல ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.
கெட்டப்பெயரை மாற்ற முயலும் யோகி ஆதித்யநாத்தின் திட்டம்
இந்தத் திட்டத்தின்கீழ் மாநிலத்தில் 15 கோடி மக்கள் பயனடைந்துள்ள நிலையில், நவம்பர் மாதத்துடன் திட்டம் முடிவடைய இருந்தது. இந்த திட்டத்தில் குடும்ப அட்டைக்கு ரேஷனில் இலவசமாக ஐந்து கிலோ கோதுமை, ஒரு கிலோ பருப்பு வழங்கப்படுகிறது.
இதனுடன் உத்தரப்பிரதேச அரசு கூடுதலாக ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், உப்பு, சர்க்கரை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: ரஜோரி எல்லையில் தீபாவளி கொண்டாடும் பிரதமர்