தெலுங்கானா, மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள எல்.பி மைதானத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான சிறப்பு யோகா சிறப்பு நிகழ்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், தெலுங்கானா ஆளுநர தமிழிசை, விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பேசிய ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி, யோகாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் பரப்பிய பெருமை பிரதமர் மோடியை சேரும் எனறு கூறினார்.
வரும் ஜூன் 21ஆம் தேதி உலக யோகா தினத்தை முன்னிட்டு, ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின் ஒரு பகுதியாக, 100 நாட்களுக்கு முன் பல்வேறு இடங்களில் பல சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட 75 நாடுகளில் யோகா விழா நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ஹைதராபாத்தில் உள்ள டேங்க் பண்டில் ஜூன் 21-ம் தேதி யோகா தினம் மிக பிரமாண்டமாக கொண்டாடப்படும் என்றார். ஹைதராபாத் மக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஊழியர்கள் மற்றும் பொது மக்களையும் யோகா தின கொண்டாட்டத்தில் பங்கேற்க அவர் அழைப்பு விடுத்தார்.
இந்த சிறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள், பாட்மிட்டன் வீராங்கனை சாய்னா நெய்வால், மிதாலி ராஜ், திரைப்பட கலைஞர்கள் அமைப்பின் தலைவர் மன்சு விஷ்னு, ஆகியோர் கலந்துகொண்டனர். தலைவர்கள் பேசி முடித்த பிறகு சிறிதுநேரம் யோகா செய்தனர்.
இதையும் படிங்க: இறுதிவரை போராடு, உன் மீது நம்பிக்கைகொள் - தாமஸ் கோப்பையின் தாரக மந்திரம்! ஸ்ரீகாந்த் சுவாரஸ்யம்