ETV Bharat / bharat

பிரதமர் மோடி உடன் யஷ், ரிஷப் ஷெட்டி சந்திப்பு - பிரதமர் மோடி உடன் ரிஷப் ஷெட்டி

பெங்களூருவில் பிரதமர் நரேந்திர மோடி நடிகர்கள் யஷ், ரிஷப் ஷெட்டி ஆகியோரை சந்தித்தார்.

Yash, Rishab Shetty, Shraddha Jain meet PM Narendra Modi

author img

By

Published : Feb 13, 2023, 6:40 PM IST

பெங்களூரு: ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சியான "ஏரோ இந்தியா 2023" 14ஆவது பதிப்பை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்.13) கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொடங்கி வைத்தார். இதற்கு முன்னதாக அவரை கன்னட திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களான கேசிஎஃப் நடிகர் யஷ், காந்தாரா நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி, ஹோம்பேல் பிலிம்ஸ் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர், மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் மனைவி அஷ்வினி உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்த சந்திப்பு பெங்களூருவில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்றது. இதுகுறித்து ஹோம்பேல் பிலிம்ஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "புதிய இந்தியா மற்றும் முற்போக்கு கர்நாடக மாநிலத்தை வடிவமைப்பதில் பொழுதுபோக்குத் துறையின் பங்கைப் பற்றி பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடினோம். அதற்காக பெருமைப்படுகிறோம்" எனப் பதிவிடப்பட்டுள்ளது.

  • Namashkar, yes, I met the Honorable Prime Minister of our Country. His first word to me was ‘Aiyyo!’.
    I am not blinking, that’s my ‘O My Jod, he really said that, this is really happening!!!!’ look. Thank you @PMOIndia! pic.twitter.com/zBYexcy1I2

    — Aiyyo Shraddha (@AiyyoShraddha) February 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதேபோல முன்னாள் கிரிக்கெட் வீரர்களான அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் ஆகியோரும் குடும்பத்தினருடன் பிரதமர் மோடியை சந்தித்தனர். பிரைம் வீடியோ தொடரான புஷ்பவள்ளி மற்றும் சமூக வலைதள பிரபலமான அய்யோ ஷ்ரத்தா ஜெயின் இந்த சந்திப்பின்போது உடனிருந்தார். இதுகுறித்து ஜெயின் தனது ட்விட்டர் பக்கத்தில், "நமது நாட்டின் பிரதமரை சந்தித்தேன். அவர் என்னிடம் சொன்ன முதல் வார்த்தை ஐயோ! நான் கண் சிமிட்டவில்லை. அவர் உண்மையிலேயே அதை சொன்னார்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: என்னுடைய அரசியல் எதிரி 'சாதி' தான் - நீலம் பண்பாட்டு மைய நிகழ்ச்சியில் கமல் பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.