உத்தரப் பிரதேசம்: ஆக்ராவிலிருந்து டெல்லி வரையிலான புகழ் பெற்ற யமுனா விரைவுச்சாலை(yamuna expressway) இப்போது சடலங்களைக் கொட்டும் பகுதியாக மாறிவிட்டது. ஆக்ராவிலிருந்து நொய்டா வரை 165 கி.மீ. கொண்ட யமுனா விரைவுச்சாலையில், ஆக்ரா மற்றும் மதுரா மாவட்டங்களின் எல்லையில், பல அடையாளம் தெரியாத சடலங்கள் கொட்டப்படுகின்றன.
சமீபத்தில், மதுரா காவல்துறை ஆயுஷி யாதவ் கொலை வழக்கில் தந்தை மற்றும் தாயை கைது செய்தனர். மதுரா மாவட்டத்தின் எல்லையில் 12-க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சடலங்கள் சிதைக்கப்பட்டிருப்பதால் போலீசாரால் அடையாளம் காணமுடியவில்லை.
2021 ஆம் ஆண்டில், நான்கு சிறுமிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த வழக்கும் விசாரணையில் தான் உள்ளது. மதுராவின் எஸ்.பி. சிட்டி எம்பி சிங் கூறுகையில், ”மாவட்ட எல்லையில் உள்ள யமுனா விரைவுச்சாலையில் சிறப்பு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு இடங்களிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆட்டோவில் தவறவிட்ட ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள்... மணப்பெண் வீட்டாருக்கு காத்திருந்த நெகிழ்ச்சி...