ETV Bharat / bharat

பாலியல் புகார் : மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டம் - விசாரணையில் வெளிப்படைத்தன்மை? - Delhi news

பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Wrestlers
Wrestlers
author img

By

Published : Apr 24, 2023, 10:43 AM IST

டெல்லி : இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண் மல்யுத்த வீராங்கனைகள் பயிற்சியாளர்கள் மற்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்டோரால் பல ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வருவதாக கூறி கடந்த ஜனவரி மாதம் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் நட்சத்திர வீரர், வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் பூனியா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வீரர், வீராங்கனைகளின் புகாரை குறித்து விசாரிக்க மேரி கோம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய விளையாட்டு அமைச்சகம் அமைத்தது. இந்நிலையில் பாலியல் புகார் தெரிவித்து 3 மாதங்கள் கடந்தும் நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

போராட்டம் முடிந்து 2 மாதங்களுக்கு பிறகும், தங்களுக்கு மிரட்டல்கள் வருவதாகவும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் வீரர்கள் குற்றச்சாட்டு முன்வைத்தனர். மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொடுக்கப்பட்ட பாலியல் புகார் குறித்து இதுவரை முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை என வீரர் வீராங்கனைகள் தெரிவித்தனர்.

ஏற்கெனவே நடந்த விசாரணைக் குழுவின் அறிக்கையை வெளியிடக் கோரியும், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது கைது நடவடிக்கை எடுக்கக் கோரியும் வீரர் வீராங்கனைகள் தெரிவித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக், போராட்டத்தின் மருந்து எடுக்கச் சென்று திரும்பிய தன்னை, போலீசார் அனுமதிக்க மறுத்ததாகவும், போராட்ட களத்திற்குள் உணவு, தண்ணீர் உள்ளிட்டவற்றை கூட கொண்டு செல்ல போலீசார் அனுமதி மறுப்பதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய மற்றொரு வீராங்கனை சாக்சி மாலிக், மத்திய டெல்லி கனோட் பிளேஸ் காவல் நிலையத்தில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ்பூஷண் சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் புகார் கொடுத்து உள்ளதாகவும் அந்த புகார் குறித்து இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.

அரசு நியமித்த குழுவின் அறிக்கை இதுவரை பொது வெளியில் வெளியிடப்படவில்லை என்றும் மல்யுத்த வீராங்கனைகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட அறிக்கை அத்துடன் வெளியிடப்பட வேண்டும் என்றார். மேலும் பிரிஜ்பூஷனுக்கு எதிராக புகார் கொடுத்தவர்களில் ஒருவர் 18 வயதிற்கும் குறைவான பெண் என்றும் அதனால் புகார்தாரர்களின் பெயரை போலீசார் வெளியிடக் கூடாது என்றார்.

மேலும் பிரிஜ்பூஷண் சரண் கைது செய்யப்படும் வரை போராட்ட களத்தை விட்டு நகரப் போவதில்லை என சாக்சி மாலிக் தெரிவித்தார்.

இதையும் படிங்க : சூடான் ராணுவ மோதல் - பலி எண்ணிக்கை அதிகரிப்பு! இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.